/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்கள் குடிநீரை காய்ச்சி பருக ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்
/
மாணவர்கள் குடிநீரை காய்ச்சி பருக ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்
மாணவர்கள் குடிநீரை காய்ச்சி பருக ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்
மாணவர்கள் குடிநீரை காய்ச்சி பருக ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்
ADDED : நவ 29, 2024 06:34 AM
தேனி: மாணவர்கள் குடிநீரை காய்ச்சி பருக ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., இந்திராணி முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசுகையில், பள்ளி வளாகம், வளாகத்திற்கு 100மீ., தொலைவிற்குள் உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் விற்பனை செய்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, மருத்துவ உதவிகள் செய்து தர வேண்டும்.
மாணவர்கள் குடிநீரை காய்ச்சி பருக ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் டி.இ.ஓ.,க்கள் வசந்தா, சண்முகவேல், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, பயிற்சி சப் கலெக்டர் டினு அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.