தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உடல் அசைவுகளில் கணிதம் கற்பித்தல்

உடல் அசைவுகளில் கணிதம் கற்பித்தல்

உடல் அசைவுகளில் கணிதம் கற்பித்தல்


UPDATED : செப் 17, 2026 05:15 PM

ADDED : செப் 17, 2026 05:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 05:15 PM ADDED : செப் 17, 2026 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி:போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் உடல் அசைவுகளில் மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தலை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி தலைமையாசிரியர் மரியசிங்கம் தலைமையில் நடந்தது. பள்ளி மாணவர்கள் புத்தக பாடமாக இல்லாமல் உடல் செயல் பாடுகள், நடன அசைவுகள் மூலம் கணிதம் கற்பிக்கும் முறையை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ஆராய்ச்சியாளர் ஜனனி சுரேஷ்ராம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் இப்பள்ளி மாணவர்களுக்கு வண்ணங்களில் அமைப்பு வரிசை, வளரும் அமைப்புகள், கண்ணாடி பிம்பம், 2 ன் மடங்குகள், தரவு பகுப் பாய்வு, முக பாவனைகள் மூலம் தகவல், செயல் பாடுகள், நடன அசைவுகள் மூலம் எளிமையாக கணித திறனை மேம்படுத்தும் வகையில் பாடம் கற்பிக்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்களின் தனித்திறமை, சுய ஆர்வம், முழு ஈடுபாடு வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சந்திரகலா, முத்துலட்சுமி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us