ADDED : ஜன 05, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் அடைய செய்தவரை ' போக்சோ' வில் போலீசார் கைது செய்தனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் குட்டியாறு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் 25.
இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
தற்போது சிறுமி ஏழு மாதம் கர்ப்பம் என்ற நிலையில், அது குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது.
மூணாறு போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் அஸ்வினை ' போக்சோ' வில் கைது செய்தனர்.

