/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில், கடை ஆகியவற்றில் திருட்டு: போலீசார் விசாரணை
/
கோயில், கடை ஆகியவற்றில் திருட்டு: போலீசார் விசாரணை
கோயில், கடை ஆகியவற்றில் திருட்டு: போலீசார் விசாரணை
கோயில், கடை ஆகியவற்றில் திருட்டு: போலீசார் விசாரணை
ADDED : ஆக 21, 2025 08:23 AM
மூணாறு : மாட்டுபட்டி 'எக்கோ பாய்ண்ட்' டில் உள்ள கடையிலும், அருவிக்காடு எஸ்டேட்டில் கோயிலிலும் தங்க நகை, பணம் ஆகியவை திருடு போனது குறித்து தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மூணாறு அருகே அருவிக்காடு எஸ்டேட், சென்டர் டிவிஷனில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இடுக்கியில் இருந்து போலீஸ் மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் வர வழைக்கப்பட்டு சோதனை நடந்தது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் மாட்டுபட்டி 'எக்கோ பாய்ண்ட்' டில் ரோட்டோரம் உள்ள சேகரின் கடையை நேற்று முன்தினம் இரவு உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். அருவிக்காடு செல்லும் வழியில் எக்கோ பாய்ண்ட் உள்ளதால் ஒரே கும்பல் 2 சம்பவங்களிலும் ஈடுபட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.