ADDED : டிச 07, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி ருக்மிணி சத்யபாமா சமேத கோவிந்த சுவாமி கோயில் திருப்பணிகள் சில மாதங்களாக நடைபெற்றது.
திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ஆண்டாள் நாச்சியார் விக்ரகம் ஊர்வலமாக கோயிலிற்கு எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, சுவாமிக்கு உயிர் ஊட்டுதல், நடைபெற்றது. பின்னர் கோபுரம், நவக்கிரகங்கள், நாக தேவதை, கருடாழ்வார், பஞ்சமுக ஆஞ்சநேயர், கருப்ப சுவாமி மற்றும் ஆண்டாள் நாச்சியார் கோபுரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.