/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில் கும்பாபிஷேகம்: அம்மாபட்டி மக்கள் தர்ணா போராட்டம்
/
கோயில் கும்பாபிஷேகம்: அம்மாபட்டி மக்கள் தர்ணா போராட்டம்
கோயில் கும்பாபிஷேகம்: அம்மாபட்டி மக்கள் தர்ணா போராட்டம்
கோயில் கும்பாபிஷேகம்: அம்மாபட்டி மக்கள் தர்ணா போராட்டம்
ADDED : ஜூன் 23, 2025 05:57 AM

தேவதானப்பட்டி : ''பட்டாளம்மன் முத்தையா கோயில் கும்பாபிஷேகத்தில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.'' என, அம்மாபட்டி பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பட்டாளம்மன் முத்தையா கோயில் உள்ளது. ஜூன் 27ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர். மேல்மங்கலம் அம்மாபட்டியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தங்கள் சமுதாயத்தினருக்கு கோயில் கும்பாபிஷேகத்தில் உரிய பிரதிநிதித்துவம் லழங்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம் என ராஜகாளியம்மன் கோயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வேலுச்சாமி, வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.