/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் தற்காலிக சீரமைப்பு கனரக வாகனங்களால் விபத்து அபாயம் - சபரிமலை சீசனுக்கு முன் நிரந்தர நடவடிக்கை தேவை

ADDED : நவ 04, 2025 04:34 AM

கூடலுார்:  குமுளி மலைப்பாதையில் ரோடு விரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணியால் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.
சபரி மலையில் மண்டல பூஜைக்காக கார்த்திகை 1ல் நடை திறக்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு அதிக அளவில் வருவார்கள். இதில் தேனி இடுக்கி மாவட்ட எல்லையில் உள்ள குமுளி மலைப்பாதை வழியாக கூடுதல் பக்தர்கள் வாகனங்களில் செல்வார்கள்.
லோயர் கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். இதில் கொண்டை ஊசி வளைவு, மாதா கோயில் வளைவு,  இரைச்சல் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கும். 2018ல் பெய்த கனமழையால் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பல நாட்கள் போக்குவரத்து தடைப்பட்டது. அதன் பின் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க கற்களால் தடுப்புச் சுவர், தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது.
இருந்த போதிலும் கனமழை நாட்களில் சிறு சிறு மண் சரிவு, மரங்கள் சாய்வது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் கொண்டை ஊசி வளைவு அருகே 3வது பாலத்தை ஒட்டி ரோட்டில் விரிசல் ஏற்பட்டது. இரவில் அப்பகுதியில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு எச்சரிக்கை போர்டு வைத்தனர். தேசிய நெடுஞ்சாலைத்துறைத் துறை சார்பில் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.
சபரிமலை உற்ஸவ விழா துவங்கியவுடன் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் இவ்வழியே வரும் நிலையில், தற்காலிக சீரமைப்பு பணி சாத்தியமாகாது. மேலும் நவம்பர் இறுதியில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மேலும் அப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் சீசன் துவங்குவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் நிரந்தரமாக கற்கள் வைத்து அப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் நிலை உள்ளது.