/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாரை கண்டித்து தேனியில் ரோடு மறியல்
/
போலீசாரை கண்டித்து தேனியில் ரோடு மறியல்
ADDED : செப் 30, 2011 01:31 AM
தேனி : பஸ் டிரைவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதை கண்டித்து தேனியில் ரோடு மறியல் நடந்தது.
நேற்று மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் தேனி நகராட்சியிலும், ஒன்றியத்திலும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய வந்தனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து இருந்தது. எனவே பெரியகுளம் வழியாக செல்லும் பஸ்களை போலீசார் பைபாஸ் ரோடு வழியாக திருப்பி விட்டிருந்தனர். ஆனால் தனியார் பஸ் டிரைவர் ஒருவர் போலீசார் திருப்பி விட்டுள்ள பாதையில் செல்லாமல், பெரியகுளம் ரோடு வழியாக பஸ் ஓட்டி வந்தார். இவரை தொடர்ந்து மற்ற பஸ்களும் வரத்தொடங்கின. இதனால் பெரியகுளம் ரோட்டில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அய்யாச்சாமி தனியார் பஸ் டிரைவர் பாலசுப்பிரமணியை தாக்கினார். அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பஸ்சை நிறுத்தி விட்டு ரோட்டில் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக பயணிகளும் பொதுமக்களும் போலீசாரை கண்டித்து மறியல் செய்தனர். டி.எஸ்.பி., புஷ்பம் தலைமையிலான போலீசார் வந்து மறியல் செய்தவர்களுடன் சமரச பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.