நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : திருநெல்வேலி சங்கர்நகரை சேர்ந்தவர் தனராஜ், 55.
இவருக்கு தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் வீடு, நிலம், கிணறு உள்ளது. ராயப்பன்பட்டி சர்ச் தெருவை சேர்ந்த பிரபாகரன், 45. போலி ஆவணம் தயார் செய்து தனராஜின் நிலத்தை விற்று விட்டார். தேனி நில ஆக்கிரமிப்பு மீட்பு பிரிவில் தனராஜ் புகார் செய்தார். பிரபாகரனை இன்ஸ்பெக்டர் கோபிநாத் கைது செய்தார். உடந்தையாக இருந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

