/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்மாய் ஆக்கிரமிப்பால் விவசாயம் பாதிப்பு
/
கண்மாய் ஆக்கிரமிப்பால் விவசாயம் பாதிப்பு
ADDED : ஜூலை 24, 2011 09:47 PM
பெரியகுளம் : பெரியகுளம் செட்டிகுளம் கண்மாய்க்கு கல்லாறு அணையடி கெஜத்தில் இருந்து நீர் வருகிறது.
சிறிதளவு மழை பெய்தாலே கண்மாய் நிரம்பும். கண்மாயினால் நுற்றிற்கும் அதிகமான கிணறுகளுக்கு நிலத்தடி நீர் இருந்து வந்தது. தற்போது பல கிணறுகள் வறண்டு உள்ளது. கண்மாய் நீர் தேக்க பரப்பு ஆக்கிரமிக்கப் பட்டு அழிந்து வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் நெல், கரும்பு விவசாயம் மற்றும் தென்னந்தோப்புகளாக மாற்றி வருகின்றனர். வடகரை பகுதியில் உள்ள நெல் விவசாயம் செய்பவர்கள் இக்கண்மாயை நம்பியே உள்ளனர்.மழைநீர் கண்மாய்க்கு வந்தால் ஆக்கிரமிப்பாளர்களின் விவசாயம் பாதிக்கும். நீரை வரவிடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் வேறு திசையில் திருப்பி விடுவதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் பிரச்னையில் தலையிட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கண்மாயினை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.