ADDED : ஜூலை 24, 2011 09:48 PM
வருஷநாடு : கோடாளியூத்து கிராமத்திற்கு ரோடு வசதி ஏற்படுத்தவேண்டும்.
கடமலை-மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு கிராமத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் கோடாளியூத்து கிராமம் உள்ளது. 2004-05ல் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் 2 கி.மீ தூரத்திற்கு மெட்டல் சாலை போட்டனர். மீதமுள்ள 2 கி.மீ தூரம் ஊராட்சி நிதியில் இருந்து மண் சாலை போட்டனர். கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுரோடுகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மாணவர்கள் கால்நடையாகவே தும்மக்குண்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.ரோடு வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம பொதுமக்கள் சார்பில் பலமுறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கோடாளியூத்து கிராமத்திற்கு ரோடு வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.