/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பு அகற்றியும் போக்குவரத்து நெரிசல்
/
ஆக்கிரமிப்பு அகற்றியும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 25, 2011 10:27 PM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றியும் போக்குவரத்தில் நெருக்கடி தொடர்கிறது.
ஆண்டிபட்டி வைகை ரோட்டில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள், கடைகள் அமைத்திருந்தனர். ரோடு பகுதி வரை இருந்த ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து சீதாராம்தாஸ் நகர் வரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பில் இடிக்கப்பட்ட கட்டட இடிபாடுகள் அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே ஆட்டோக்களை ரோடு வரை நிறுத்திக்கொள்கின்றனர். போலீசாரும் கண்டு கொள்வதில்லை. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின்னும் வைகை ரோடு சந்திப்பு, அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் இன்னும் நெருக்கடி தீரவில்லை.