/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளர்கள் மாற்றம்
/
ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளர்கள் மாற்றம்
ADDED : ஜூலை 27, 2011 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர்கள் 29 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் செயற்பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த ஆட்சியில் சொந்த மாவட்டங்களில் இருந்து நீண்ட தூரம் உள்ள மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள செயற்பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தங்களது சொந்த மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் பணி மாறுதல் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.