/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாய்க்கால் தூர்வாறும் பணி ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு
/
வாய்க்கால் தூர்வாறும் பணி ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு
வாய்க்கால் தூர்வாறும் பணி ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு
வாய்க்கால் தூர்வாறும் பணி ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 27, 2011 10:39 PM
போடி : போடி பகுதியில் உள்ள அணைக்கட்டு, கண்மாய், வாய்க்கால்களை தூர்வாரி, புதுப்பித்து பழுதுபார்ததலுக்கு உலக வங்கி 6.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
போடி பகுதியில் உள்ள பெரும்பாலான அணைக்கட்டுகள் உடைந்தும், தூர்வாரமல் மண் மேவி உள்ளன. மழைக்காலங்களில் அணைக்கட்டுகள் மேலும் உடைந்து விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்து பல ஏக்கர் பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். இது போல பல கண்மாய்கள் தூர்வாரமல், முற்புதற்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீர்வரத்து வாய்க்கால் செல்லும் பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் உள்ளதால் சீரான முறையில் கண்மாய்களுக்கு நீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அணைக்கட்டுகளை புதுப்பித்தும், கண்மாய்களை தூர்வாரவும், நீர்வரத்து வாய்க்கால் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை நிறைவேற்றும் வகையில் உலகவங்கி நீர்வள, நிலவள மேம்பாடு திட்டத்தின் கீழ் 6.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.