/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு
ADDED : ஜூலை 31, 2011 11:16 PM
தேனி : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழிற் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழிற்கடன், உதவிகளை வழங்கி வருகிறது. அதே போல் கடந்தாண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு தொழில் மற்றும் தொழிற்கடன் உதவிகளை வழங்கி வருகிறது. இவர்கள் பெறும் கடனுக்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டியும், பெண்களுக்கு 4 சதவீதமும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழிற்கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் கடன் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.