/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் பாதாள சாக்கடை திட்டம் 14 பகுதிகளுக்கு விரிவாக்கம்
/
தேனியில் பாதாள சாக்கடை திட்டம் 14 பகுதிகளுக்கு விரிவாக்கம்
தேனியில் பாதாள சாக்கடை திட்டம் 14 பகுதிகளுக்கு விரிவாக்கம்
தேனியில் பாதாள சாக்கடை திட்டம் 14 பகுதிகளுக்கு விரிவாக்கம்
ADDED : ஆக 02, 2011 11:42 PM
தேனி : தேனியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேலும் 14 பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 42.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 2011 பிப்ரவரி 28 முதல் நடந்து வருகிறது. நகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகள் விடுபட்டுள்ளன. அவ்வாறு விடுபட்டுள்ள ஒன்டிவீரன் காலனி, கக்கன்ஜி காலனி, விஸ்வநாததாஸ் நகர், வள்ளிநகர் விரிவாக்க பகுதிகள், பாலன் நகர் விரிவாக்க பகுதிகள், குறிஞ்சி நகர் விரிவாக்க பகுதிகள், வெங்களா நகர் விரிவாக்க பகுதிகள், ஸ்ரீராம் நகர் விரிவாக்க பகுதிகள், வீரப்ப அய்யனார் சாலை விரிவாக்க பகுதிகள், சிவாஜிநகர் விரிவாக்க பகுதிகள். புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதி விரிவாக்க பகுதிகள், சோலைமலை அய்யனார் கோவில் விரிவாக்க பகுதிகள், சடையால்கோவில் மற்றும் ராகவன் காலனி விரிவாக்க பகுதிகள், அரசினர் தொழிற்பேட்டை பகுதிகள் ஆகிய 14 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடு செய்யவும், கூடுதல் செலவினத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற நிதிநிறுவனங்களில் கடன் மற்றும் மானியம் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.