ADDED : ஆக 11, 2011 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம் : பண்ணைப்புரம் பஸ் நிறுத்தத்தின் கீழ்ப்பகுதியில், காட்டாற்று ஓடையை ஒட்டி வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
இந்த இடத்தில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடும் இம்மக்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பட்டா வழங்காததை கண்டித்து இவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ., விவசாய சங்க, மாவட்ட செயலாளர் சுருளிநாதன் தலைமையில் மக்கள் தயாராகினர். தாசில்தார் சூரியகலா பேச்சுவார்த்தை நடத்தினார்.
பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் சமரசம் செய்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.