/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய் கிராம அளவில் முகாம் நடத்த கோரிக்கை
/
வருவாய் கிராம அளவில் முகாம் நடத்த கோரிக்கை
ADDED : செப் 11, 2011 11:21 PM
தேவதானப்பட்டி : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களை, வருவாய் கிராம அளவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், தாலுகா அளவில் நடந்து வருகிறது. இதுபோன்ற முகாம்களில் முழுமையாக டாக்டர்கள் கலந்து கொள்வதில்லை. பெரியகுளத்தில் நடந்த முகாமில் கண் டாக்டர் வராததால்,பாதிக்கப்பட்டவர்கள் தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். தாலுகா தலைநகரங்களில் நடக்கும் முகாமிற்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதில் சிரமம் உள்ளது. அவர்கள் முழுமையாக பயன்பெறும் வகையில், அனைத்து குறைகளையும் கண்டறியும் வகையில், டாக்டர்களை முழுமையாக கலந்து கொள்ள செய்ய வேண்டும். வருவாய் கிராம அளவில் முகாம்களை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.