ADDED : செப் 11, 2011 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : உள்ளாட்சி தேர்தலில், நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதையொட்டி நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பு தேனியில் நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தர்மசிவம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) ராஜசேகரன், பி.டி.ஓ., பாலசுப்பிரமணியம், போடி நகராட்சி மேலாளர் பிச்சைமணி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.