/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்ளாட்சி தேர்தல் கிராமங்களில் சுறுசுறுப்பு
/
உள்ளாட்சி தேர்தல் கிராமங்களில் சுறுசுறுப்பு
ADDED : செப் 11, 2011 11:21 PM
தேவதானப்பட்டி : உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், தேர்தலில் நிற்பவர்கள் ஆதரவு திட்டி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி பொறுப்புக்களில் உள்ளவர்கள் மீண்டும் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதற்காக தாங்கள் வசிக்கும் கிராமங்களில் உள்ள ஊர் பெரியவர்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர். இதே போன்று புதிதாக போட்டியிட விரும்புகிறவர்களும் ஆதரவு திரட்ட களம் இறங்கியுள்ளனர். கிராம ஊராட்சிகளில் கட்சி இல்லாமல் சுயேட்சை என்பதால் போட்டியிடும் நபர்கள் தங்களின் உறவு சார்ந்தவர்களிடம் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். கிராமங்களில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து வருகிறது.