நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தேனி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் சின்னமனூரில் நடந்தது.
அரசு ஆஸ்பத்திரி தலைமை அலுவலர் சக்வேல் துவக்கி வைத்தார். நகர அ.தி.மு.க., செயலாளர் சுரேஷ், கே.கே.குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல் மஜீத், த.மு.மு.க., மாவட்ட துணை செயலாளர் அஹமது தாரிக், மருத்துவ அணி செயலாளர் சுஜாத் அலி உட்பட பலர் பேசினர். நகர த.மு.மு.க., தலைவர் முகமது , ம.ம.க., நகர செயலாளர் சித்தா மதார் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.