/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு
/
கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு
ADDED : செப் 23, 2011 01:08 AM
கூடலூர் : உத்தமபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு, வழக்கறிஞர்கள் சங்கம், அட்வகேட்ஸ் அசோசியேசன் இணைந்து கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தியது.
உத்தமபாளையம் சார்பு நீதிபதி சரவணப்பெருமாள் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில், முதல்வர் அனுசூயா வரவேற்றார். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு பெறுவது பற்றிய சட்டம், ஈவ்டீசிங் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய சட்டம், பெண்களுக்கான சிவில் உரிமைகள் சட்டம் குறித்து வக்கீல்கள் பேசினர். நீதித்துறை நடுவர் ரவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கோவிந்தராஜன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சடமாயன், செயலாளர் உமாபதி, அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேஷ்வரன், வழக்கறிஞர்கள் ஜார்ஜ், சையதுஅபுதாகிர் பங்கேற்றனர்.