/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
118 வயது நீதிமன்ற கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிப்பு
/
118 வயது நீதிமன்ற கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிப்பு
118 வயது நீதிமன்ற கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிப்பு
118 வயது நீதிமன்ற கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிப்பு
ADDED : மார் 07, 2024 06:05 AM

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 118 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட நீதிமன்றம் பழமை மாறாமல் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
பெரியகுளத்தில் 1906ல் ஆங்கிலேயரால் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் கட்டப்பட்டது.
இந்த நீதிமன்றத்தில் மேல்தளத்தில் மழை காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டும், நீதிமன்ற அலுவலகங்களில் தரைத்தளத்தில் கற்கள், மேல்தளத்தில் ஓடுகள் சேதமாகி மராமத்துப் பணி செய்யும் நிலை ஏற்பட்டது.
இங்கு செயல்பட்ட நீதிமன்றங்கள் புதிதாக கட்டப்பட்ட பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்திற்கு சென்றன.
முந்தைய நீதிமன்றத்தை மதுரை பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு ரூ.1 கோடி மதிப்பீட்டில்
4500 சதுர அடி கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கழுகுமலையில் இருந்து சுண்ணாம்பு, மதுரையிலிருந்து கடுக்காய், திருச்செந்தூரில் இருந்து நாட்டுக்கருப்பட்டி, முட்டை, தயிருடன் கலவை மிஷினில் அரைக்கப்பட்டு இதன் கலவையை, மணலுடன் கலந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
குளுமையை ஈர்க்கும் தன்மையில் மேல்தளத்தில் குலைவு ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது.
தேக்கு மரம் ஜன்னல்கள் பாலிஷ் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் நீதிபதி இருக்கை, விசாரணை கூண்டு அமைக்கும் தச்சுப்பணி நடந்து வருகிறது.
இக்கட்டத்தின் உறுதியும் கட்டுமானத்தின் நேர்த்தியும் மின்சாரம் இல்லாவிட்டாலும் குளுகுளுவென்று இருப்பது சிறப்பாகும்.
விரைவில் சீரமைப்பு பணி முடியும் நிலையில் உள்ளது.-

