/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தந்தைக்கு தலை வணங்கும் நிர்வாகிகள் மகனுக்கு எதிர்ப்பு போடி நிகழ்ச்சியை புறக்கணித்தனர்

ADDED : மார் 08, 2024 02:21 AM
போடி:தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து நலத்திட்ட துவக்க விழாவை நேற்று புறக்கணித்தனர்.
பன்னீர்செல்வம் போடிக்கு வந்தாலே அவரது அணி நகர, ஒன்றிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் உடன் இருப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாக அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி., வந்தால் பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் பெயரளவில் வந்து உடனே திரும்பி சென்று விடுவார்கள். நேற்று போடி நகராட்சியில் 9, 21 வது வார்டில் எம்.பி., நிதியில் மின் கோபுர விளக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்காக ரவீந்திரநாத் எம்.பி.,வந்தார். இந் நிகழ்ச்சியை பன்னீர்செல்வம் அணி போடி நகர செயலாளர் பழனிராஜ், அவைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் புறக்கணித்தனர்.
நிர்வாகிகள் கூறியதாவது: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு எப்போதும் தலை வணங்கி விசுவாசமாக இருப்போம். அவரும் நிர்வாகிகளை அரவணைத்து செல்வார். ஆனால் ரவீந்திரநாத் எம்.பி., நிர்வாகிகளுக்கு எந்த தகவலும் கொடுப்பதில்லை. அவரது தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளும் திட்ட பணி செய்ய பெரியகுளம் நிர்வாகி ஒருவருக்கு மட்டும் டெண்டர் கொடுக்கிறார். இவரது நிதியில் பணிகள் தி.மு.க., பா.ஜ. கவுன்சிலர்களின் வார்டுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நகர நிர்வாகிகள் அனைவரும் எம்.பி., விழாவை புறக்கணித்துள்ளோம் என்றனர்.