நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே கொப்பைம்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி 46, இவரது மகன் மகாவிஷ்ணு 15, கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சிறுவனை மதியம் 2:00 மணியிலிருந்து காணவில்லை. சிறுவன் தன்னுடன் ஆதார் அட்டை, பிறப்பு சான்று மற்றும் பணம் ரூபாய் ஆயிரத்தை வீட்டில் இருந்து எடுத்து சென்றுள்ளார். மகனை பல இடங்களில் தேடி காணாததால் தந்தை பாலாஜி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.