/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் பாதிப்பிற்கு தீர்வு காண 'செயலி' மத்திய அரசின் வேளாண் துறை வடிவமைப்பு

ADDED : ஜன 22, 2025 01:54 AM
தேனி:பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு அலைபேசி 'செயலியை' வடிவமைத்து உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் காலநிலைக்கு ஏற்ப பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அனைத்து வகை பயிர்களிலும் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதல்கள் குறித்து தெரிந்து கொள்ள மத்திய அரசின் வேளாண் துறை சார்பில் புதிதாக அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலியில் பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டாரங்கள் வாரியாக முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்து பயிற்சி வழங்கும் பணியை வேளாண் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
வேளாண் துறையினர் கூறியதாவது: எந்த மாவட்டத்தில் இருந்தும் பாதிக்கப்பட்ட பயிரை விவசாயிகள் பதிவேற்றம் செய்யலாம். அந்த புகைப்படம், மாவட்டத்தின் வெப்பநிலை, பருவநிலை, மண் தன்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு எந்த மருந்துகள் தெளிக்க வேண்டும்.
எந்த அளவில் எத்தனை நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் என தீர்வு வழங்கும் வகையில் 'செயலி' வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் செயல்படும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சிகள் நிர்வாக அலுவலகம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.