/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் நாளை மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு
/
முல்லைப் பெரியாறு அணையில் நாளை மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் நாளை மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் நாளை மத்திய துணை கண்காணிப்பு குழு ஆய்வு
ADDED : அக் 15, 2024 05:40 AM
கூடலுார்: முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழு நாளை (அக்., 16) ஆய்வு மேற்கொள்கிறது.
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் ராகேஷ் காஷ்யப் தலைமையிலான கண்காணிப்பு குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையில் உள்ளது.
துணை குழுவில் தமிழக அரசு சார்பில் கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருண் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழு 2024 ஜூலை.19ல் அணையின் நீர்மட்டம் 127.35 அடியாக இருந்தபோது ஆய்வு மேற்கொண்டது.
தற்போது மழை பெய்து வருவதால் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நாளை ஆய்வு மேற்கொள்கிறது. நாளை மாலை குமுளி 1-ம் மைலில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் இக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடக்கும்.