/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 19, 2025 12:39 AM
தேனி: தேனி மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: ஆண்டுதோறும் சர்வசேத,தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் தலா 2 ஆண், பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்படும். ரூ.1 லட்சம் பரிசு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கம்,பாராட்டு பத்திரம் வழங்கப்படும்.
இதுதவிர போட்டிகளை நடத்தும் நடத்துனர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம், ஒரு நன்கொடையாளர்(ஆண்டிற்கு ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக நன்கொடை அளித்தவர்), போட்டி நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
தகுதி உடையவர்கள் 2024 -- 2025, 2025 -- 2026 ஆகிய 2 ஆண்டுகளுக்கான முதலமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை - 600 003 என்ற முகவரிக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என ஆக.11 மாலை 5:45 மணிக்குள் அனுப்பி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.