/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உங்களை தேடி உங்கள் ஊர் முகாமில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
/
உங்களை தேடி உங்கள் ஊர் முகாமில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊர் முகாமில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊர் முகாமில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 17, 2025 05:56 AM

பெரியகுளம்: பெரியகுளம் தாலுகாவில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' நடந்த முகாமில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்து அரிசியின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
பெரியகுளம் தாலுகாவில் 'உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்' நடந்தது. சப்-கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது.
சப்- கலெக்டர் ரஜத்பீடன் முன்னிலை வகித்தார். பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் புதிய ரேஷன் கார்டு,முதியோர் உதவித்தொகை, பட்டா கோருதல் உட்பட பல்வேறு மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார். வடுகபட்டியில் நூலக கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதிய கட்டடம் கட்டித்தர பேரூராட்சி தலைவர் நடேசன் கோரினார். நூலகத்தை கலெக்டர் பார்வையிட்டார். அருகேயுள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் குறித்தும், அரிசியின் தரம் குறித்து சோதித்தார்.
பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் செயல்படும் வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை பார்வையிட்டார். பழைய அலுவலகம் என்பதால் கட்டடத்திற்குள் மழை நீர் உள்ளே வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஒன்றிய அலுவலகத்திற்குள் பூட்டிகிடக்கும் இரு இடங்களை தோட்டக்கலை அலுவலக பயன்பாட்டிற்கு வழங்க கோரிக்கை வைத்தனர். பி.டி.ஓ., மலர்விழியிடம் பூட்டியுள்ள அறையை தோட்டக்கலை துறை பயன்பாட்டிற்கு வழங்க கூறினார்.
பெரியகுளம் -திண்டுக்கல் பைபாஸ் ரோடு, வடுகபட்டி அருகே அரசு புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கரில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் வளாகம் அமைக்க தாசில்தார் மருதுபாண்டி இடம் தேர்வு செய்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டது. வடுகபட்டி பேரூராட்சி 5 வது வார்டு கவுன்சிலர் வசந்த் பாலாஜி மனுவில், 'வடுகபட்டியில் போலி ஆவணங்களை தயார் செய்து திறந்த டாஸ்மாக்யை மூட,' கோரினார். இன்றும் முகாம் நடக்கிறது.-