/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொறியியல் பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை தேனி நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் தகவல்
/
பொறியியல் பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை தேனி நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் தகவல்
பொறியியல் பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை தேனி நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் தகவல்
பொறியியல் பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை தேனி நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் தகவல்
ADDED : ஜன 14, 2025 05:57 AM
தேனி: நகராட்சி பொறியில் பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லாததால் பணிகள் நடப்பதில் சிரமம் உள்ளதாக நகராட்சி கமிஷனர் ஏகராஜ் நகராட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் தலைவர் ரேணுப்பிரியா (தி.மு.க.)தலைமையில் நடந்தது. கமிஷனர் ஏகராஜ், துணைத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் முருகன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவுன்சிலர்கள் பேசியதாவது:
ராஜ்குமார்(தி.மு.க.): நகராட்சி குப்பை கொட்டும் இடம் முடக்கப்பட்டுள்ளது. மாநாகராட்சியாக மாறினால் குப்பை கொட்ட இடமில்லை. பெரியகுளம் நகராட்சியில் அதற்காக 90 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் வருவாய் துறையில் கூறி குப்பை கொட்டி மறுசுழற்சி செய்ய இடம் வாங்க வேண்டும்.
தலைவர்: தப்புக்குண்டுவில் உள்ள குப்பை கொட்டும் இடம் முடக்க வில்லை. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. குப்பை கிடங்கு அருகே சட்டகல்லுாரி அமைக்க அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. நகராட்சிக்கு ஆதரவாக வழக்கில் தீர்ப்பாகும் நிலை உள்ளது.
பாலமுருகன்(தி.மு.க.,): மாநகராட்சியாக மாறினால் அருகில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படும். இதில் வடவீரநாயக்கன்பட்டியில் 500 ஏக்கர், வீரபாண்டியில் 200 ஏக்கர் புறம் போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை பயன்பாடுத்திக்கொள்ள கேட்கலாம்.
கிருஷ்ணபிரபா( அ.தி.மு.க.,):சுகாதார பணிகள் மேற்கொள்ளும் தனியார் நிறுவன டெண்டரை ரத்து செய்ய வேண்டும். சரிவர பணிகள் மேற்கொள்வதில்லை. போதிய ஆட்களை நியமிக்கவில்லை.
பாலமுருகன் (தி.மு.க.,): நிறுவனத்தினரிடம் நகராட்சி நிர்வாகத்தில் பேசி உள்ளனர். அடுத்த கூட்டத்திற்குள் சரிசெய்வார்கள்.
அனுஷ்யா (தி.மு.க.): பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் கூறினால் பணிகள் நடப்பதில்லை. மீட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தாமல் மக்களுக்கு தேவையான பணிகளையும் கவனிக்க வேண்டும்.
கமிஷனர்:பொறியியல் பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லை. தற்போது உதவி பொறியாளர், ஒரு ஓவர்சியர் மட்டும் உள்ளனர். தொழில்நுட்ப உதவியாளர்கள், இரு ஓவர்சியர் பணியிடம் காலியாக உள்ளன. உயர்அதிகாரிகள் கூட்டம், உடனடியாக அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடக்கின்றன. இதனால் பணிகள் விரைந்து முடித்து தரப்படும். வீரப்ப அய்யனார் கோயில் அருகே உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் வழங்க ரூ.2.5 கோடி மதிப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகிறது.
ஆளுங்கட்சி கவுன்சிலரா...கூட்டம் துவங்கியதும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பாப்பா, கிருஷ்ணபிரபா ஆகியோர் கூட்டம் மாதந்தோறும் நடத்த வேண்டும் என்றனர்.
அதே கோரிக்கையுடன் தி.மு.க., கவுன்சிலர் அய்யனார் பிரபுவும் வலியுறுத்தினார். கோபமடைந்த நகராட்சி தலைவரின் கணவரும் தி.மு.க., கவுன்சிலருமான பாலருமுருகன், அய்யனார் பிரபுவை பார்த்து நீ ஆளுங்கட்சி கவுன்சிலரா...எப்படி பேசுகிறீர்கள் என்றார். அவர் அமைதியாகினார்.