/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் ஆய்வு செய்ய குழு அக்.25க்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

ADDED : அக் 23, 2024 05:14 AM
தேனி, : அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை ஆய்வு செய்ய மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுக்கள் ஆய்வு அறிக்கையை அக்.25க்குள் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன. வேளாண் பொருட்கள் தேவையை பொருத்து வட்டாரங்களில் துணை விரிவாக்க மையங்களும் உள்ளன. இம் மையங்கள் மூலம் நெல், கம்பு, எள், கடலை, உளுந்து பாசிப்பயறு, துவரை உள்ளிட்ட விதைகள், வேளாண் கருவிகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், உயிர் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், துணை மையங்களில் விதைகள், உரங்கள் எவ்வளவு கையிருப்பு உள்ளது, மின்னனு பண பரிவர்த்தை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த துணை இயக்குனர்கள் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உதாரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மதுரை மாவட்ட அதிகாரிகள், தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் அதிகாரிகள், மதுரையில் தேனி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.விதைகள், உரங்கள், மருந்துகள் இருப்பு தொடர்பான அறிக்கையை அக்.,25க்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறு ஆய்வுக்குழுவிற்கு வேளாண் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.