ADDED : நவ 21, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த ஆண் காட்டு யானை படைப்பா மிகவும் பிரபலம்.
அதன் நீண்டு வளைந்த தந்தங்கள், கம்பீரமான தோற்றம் ஆகியவை மிரட்சியை ஏற்படுத்தும். இந்த படையப்பா கடந்த சில நாட்களாக மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது.
அங்குள்ள புது லைன் பகுதியில் உள்ள புல் வெளியில் நேற்று காலை பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு எதிர்பாராத வகையில் படையப்பா வந்தது. அதனை பார்த்த பசுக்கள் மிரண்டு ஓடின.

