ADDED : ஏப் 16, 2025 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே முந்தலில் வசிப்பவர் கார்த்திகா 24. இவரது தந்தை கண்ணன். இருவரும் எருமை மாடுகள் வளர்க்கின்றனர்.
பத்து நாட்களுக்கு முன் வீட்டின் முன்பாக மாடுகளுக்கு உணவு வைத்து விட்டு இரவில் கண்ணன் துாங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளில் 3 எருமை மாடுகள் காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கார்த்திகா புகாரில் குரங்கணி போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மாடுகளை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

