/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அறநிலையத்துறை மரக்கன்றுகள் பராமரிக்கும் திட்டம் சுணக்கம்
/
அறநிலையத்துறை மரக்கன்றுகள் பராமரிக்கும் திட்டம் சுணக்கம்
அறநிலையத்துறை மரக்கன்றுகள் பராமரிக்கும் திட்டம் சுணக்கம்
அறநிலையத்துறை மரக்கன்றுகள் பராமரிக்கும் திட்டம் சுணக்கம்
ADDED : ஆக 05, 2025 05:13 AM
தேனி : மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து அங்கு மரக்கன்றுகள் வைக்கும் திட்டத்திற்கு நிலங்களை கண்டறிவதில் சுணக்கம் நிலவி வருகிறது.
ஹிந்து சமய அற நிலையத்துறை சார்பில் கோயில்களுக்கு சொந்தமான பயன்பாடில்லாத நிலங்களை கண்டறிந்து நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்து வளர்க்க துறை அதிகாரிகளுக்கு அத்துறையினர் கமிஷனர் உத்தரவு அனுப்பி இருந்தார். ஆனால், தேனி மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்ப்பட்ட கோயில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் பயன்பாட்டில் இல்லாத நிலம் எது என கண்டறிய முடியாமல் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இதுபற்றி துறை அதிகாரிகளிடம் கேட்டால் பதில் கூற முடியாமல் தவிக்கின்றனர். கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பயன்பாடில்லாத நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.