sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறார் திருமண தகவல் தாமதத்தால் சிறுமிகளை பாதுகாக்க முடியாத நிலை மாவட்ட சிறார் நலக்குழு தலைவர் வேதனை

/

சிறார் திருமண தகவல் தாமதத்தால் சிறுமிகளை பாதுகாக்க முடியாத நிலை மாவட்ட சிறார் நலக்குழு தலைவர் வேதனை

சிறார் திருமண தகவல் தாமதத்தால் சிறுமிகளை பாதுகாக்க முடியாத நிலை மாவட்ட சிறார் நலக்குழு தலைவர் வேதனை

சிறார் திருமண தகவல் தாமதத்தால் சிறுமிகளை பாதுகாக்க முடியாத நிலை மாவட்ட சிறார் நலக்குழு தலைவர் வேதனை


ADDED : ஜன 25, 2024 05:50 AM

Google News

ADDED : ஜன 25, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: சிறார் திருமண தகவல் தாமதமாக வருவதால் பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க முடியாத சூழல் நிலவுவதாக', மாவட்ட சிறார் நலக்குழு தலைவர் வனஜா பேசினார்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்தரங்கத்திற்கு மாவட்ட பயிற்சி அலுவலர் முகமதுபைசல் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நலஅலவலர் சியாமளாதேவி முன்னிலை வகித்தார். மாவட்ட சிறார் நலக் குழும தலைவர் வனஜா, மாவட்ட துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றனர்.

சிறார் நலக்குழுமத் தலைவர், பாலியியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் போக்சோ குறித்து பேசுகையில் சிறார் திருமணங்கள் குறித்து தகவலே காலதாமதமாக கிடைக்கிறது. சிறுமி கருவுற்று சிசு 22 வாரங்கள் ஆன நிலையில் தகவல் வருகிறது. வாரந்தோறும் அந்த சிறுமி ஆரம்ப சுகாதார நிலையம் செல்கிறார். டாக்டர்கள் சோதனை செய்கின்றனர். ஆனால் எங்களுக்கு தகவல் 22 வாரங்கள் கழித்து வருவதால் சிறுமியை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். எங்களது அலுவலகத்தை 63690 71074 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பாதுகாப்பு ஆலோசகர் சவுந்திரபாண்டியன் கூறுகையில், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் இலவச வழக்கறிஞர் நியமிக்கப்படும் வசதி உள்ளது. இதுகுறித்து களப்பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.', என்றார்.

நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், சிறார் நல பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், சேவை மைய பணியாளர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்றனர். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றனர். ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்பின் நித்யா நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us