ADDED : ஜூலை 29, 2025 01:09 AM

மூணாறு: மூணாறில் படிக்கட்டு வழியாக சுற்றுலா காரை ஓட்டிய டிரைவரின் செயல் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.
கேரளா, எர்ணாகுளம் மாவட்டம் திருப்புணித்துறையைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சிக்குச் சொந்தமான காரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மூணாறுக்கு நேற்று முன்தினம் மதியம் சுற்றுலா வந்தனர்.
அவர்கள் நகரில் மவுண்ட் கார்மல் பேராலயத்திற்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கினர். அங்கு டிரைவர் காரை நிறுத்தி இருந்தார்.
அவர் நேற்று காலை 6:00 மணிக்கு தங்கும் விடுதி பகுதியில் இருந்து காரை பேராலயத்தை நோக்கி ஓட்டி வந்தார்.
அதனை பார்த்த சிலர் கடந்து செல்ல வழி இல்லை என கூறினர்.
அதனை பொருட் படுத்தாத டிரைவர் வழி உள்ளதாக கூறி பேராலயம் படிக்கட்டில் காரை செலுத்தினார்.
டிரைவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் படிக்கட்டில் கார் சிக்கி கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.