/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாலியல் பலாத்காரம் செய்து கொலையான சிறுமியின் தந்தை, தாத்தாவுக்கு கத்தி குத்து
/
பாலியல் பலாத்காரம் செய்து கொலையான சிறுமியின் தந்தை, தாத்தாவுக்கு கத்தி குத்து
பாலியல் பலாத்காரம் செய்து கொலையான சிறுமியின் தந்தை, தாத்தாவுக்கு கத்தி குத்து
பாலியல் பலாத்காரம் செய்து கொலையான சிறுமியின் தந்தை, தாத்தாவுக்கு கத்தி குத்து
ADDED : ஜன 07, 2024 07:17 AM
மூணாறு: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சுரக்குளம் எஸ்டேட்டில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமியின் தந்தை, தாத்தா ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்தது.
அங்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தம்பதியினரின் ஆறு வயது மகள் 2021 ஜூன் 30ல் பாலியல் பலாத்காரம் செய்து வீட்டினுள் கொலை செய்யப்பட்டார்.
அச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜூனை 24, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கட்டப்பனை அதி விரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சு கொலை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை நிருபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அர்ஜூனை வழக்கில் இருந்து விடுவித்து டிச.14 ல் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்ததால் தங்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு அர்ஜூன் தந்தை சுந்தரம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கத்திகுத்து: இந்நிலையில் வண்டி பெரியாறு நகரில் நேற்று சிறுமியின் தந்தை, அர்ஜூன் உறவினர் பால்ராஜ் ஆகியோருக்கு இடையே சிறுமி இறந்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பால்ராஜ் கத்தியால் சிறுமியின் தந்தையை உடலில் பல இடங்களில் குத்தினார்.
மகனை கத்தியால் குத்துவதை கண்டு சென்ற அவரது தந்தைக்கும் கத்தி குத்து விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரும் வண்டிபெரியாறு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வண்டிபெரியாறு போலீசார் பால்ராஜை கைது செய்தனர்.