/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் முதல் சுங்கச்சாவடி மூணாறு அருகே பயன்பாட்டுக்கு வருகிறது
/
இடுக்கியில் முதல் சுங்கச்சாவடி மூணாறு அருகே பயன்பாட்டுக்கு வருகிறது
இடுக்கியில் முதல் சுங்கச்சாவடி மூணாறு அருகே பயன்பாட்டுக்கு வருகிறது
இடுக்கியில் முதல் சுங்கச்சாவடி மூணாறு அருகே பயன்பாட்டுக்கு வருகிறது
ADDED : செப் 27, 2024 07:30 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே அமைக்கப்பட்ட முதல் சுங்கச்சாவடி ஓரிரு நாட்களில் செயல்பட துவங்கும்.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே 42 கி.மீ. தூரம் ரோடு இருவழிச் சாலையாக ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின்கட்கரி ஜன.5ல் ரோட்டை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
முதல் சுங்கச்சாவடி:தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டத்தில் முதல் சுங்கச்சாவடி மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் குருசடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் எதிர்ப்பு உள்பட பல்வேறு காரணங்களால் சுங்கச் சாவடி செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது ஆந்திராவைச் சேர்ந்த நிறுவனம் கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே சுங்கச்சாவடி ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கட்டணம்:கார், ஜீப் உள்பட சிறிய ராகவாகனங்கள் ஒரு புறம் செல்ல ரூ.35, இருபுறம் வந்து செல்ல ரூ.55, ஒரு மாதம் இருபுறமும் வந்து செல்ல ரூ.1225. மினி பஸ் ஒரு புறம் ரூ.60, இரு புறம் ரூ.90, மாதம் ரூ.1980. பஸ், டிரக் வாகனங்கள் ஒரு புறம் ரூ.125, இருபுறம் ரூ.185, மாதம் ரூ.4150.
சரக்கு வாகனம்:ஒரு புறம் ரூ.195, இருபுறம் 295, மாதம் ரூ.6505 ஏழுக்கும் மேற்பட்ட அச்சுகள் கொண்ட கன ரக வாகனங்கள் ஒரு புறம் ரூ.240, இருபுறம் ரூ.335, மாதம் ரூ.7920. சுங்கச் சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் வணிகம் சாராத வாகனங்களின் உரிமையாளர்கள் மாதம்தோறும் ரூ.340 செலுத்தி பயணிக்கலாம்.

