/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி பாலியல் பலாத்காரம் போக்குகாட்டும் குற்றவாளி
/
சிறுமி பாலியல் பலாத்காரம் போக்குகாட்டும் குற்றவாளி
சிறுமி பாலியல் பலாத்காரம் போக்குகாட்டும் குற்றவாளி
சிறுமி பாலியல் பலாத்காரம் போக்குகாட்டும் குற்றவாளி
ADDED : ஜன 04, 2024 06:28 AM
மூணாறு: மூணாறு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தேடி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சலே 35, போக்கு காட்டி வருகிறார்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான சிட்டி வாரை எஸ்டேட் ஓ.சி., டிவிஷனில் தொழிலாளியான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சலே டிச.,31 மாலை 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின் அப்பகுதியில் காட்டினுள் மாயமானவரை மூணாறு போலீசார் ட்ரோன், போலீஸ் மோப்ப நாய் ஆகியவற்றின் உதவியுடன் மூன்று நாட்களாக தேடியும் எவ்வித தகவலும் தெரியவில்லை.
அவர் சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக கருதி நேற்று முன்தினம் போலீசார், 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டனர். இந்நிலையில் மூணாறு அருகே லாக் காடு எஸ்டேட் பகுதியில் நேற்று காலை சலேவை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனிடையே அவர் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தினுள் தப்பி ஓடி தலைமறைவானார். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் பகல் முழுவதும் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. நான்கு நாட்களாக தேடுதல் பணி நடந்தபோதும் சலே போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறார்.