/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விறுவிறுப்பு இன்றி ஆண்டிபட்டியில் நடந்து முடிந்த ஆட்டுச்சந்தை
/
விறுவிறுப்பு இன்றி ஆண்டிபட்டியில் நடந்து முடிந்த ஆட்டுச்சந்தை
விறுவிறுப்பு இன்றி ஆண்டிபட்டியில் நடந்து முடிந்த ஆட்டுச்சந்தை
விறுவிறுப்பு இன்றி ஆண்டிபட்டியில் நடந்து முடிந்த ஆட்டுச்சந்தை
ADDED : அக் 19, 2025 09:42 PM

ஆண்டிபட்டி: தீபாவளியை முன்னிட்டு ஆண்டிபட்டியில் நேற்று ஆட்டு சந்தை வியாபாரம் விறுவிறுப்பின்றி நடந்து முடிந்தது.
ஆண்டிபட்டி வாரச்சந்தை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடும். தீபாவளியை முன்னிட்டு ஆண்டிபட்டி வாரச்சந்தை ஒரு நாள் முன்னதாகவே நடந்தது. வாரச் சந்தையில் அதிகாலையில் துவங்கும் ஆட்டு சந்தையில் தேனி உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். வெளியூர் வியாபாரிகளும் வாங்கிச் செல்வர். தீபாவளியை முன்னிட்டு கூடுதலான எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வரும் என்ற நம்பிக்கையில் இருந்த வியாபாரிகள், பொது மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
வழக்கமான எண்ணிக்கையில் பாதி அளவு கூட விற்பனைக்கு வரவில்லை. 500 ஆடுகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தன. வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு அக்.20, 21 ஆகிய நாட்களில் கூடுவதாக இருந்த ஆட்டுச் சந்தை பல்வேறு இடங்களிலும் நேற்று துவங்கியதால் அந்தந்த பகுதியில் வியாபாரிகள் இருந்து விட்டனர். தீபாவளி தேவைக்காக பலரும் ஆடுகளை முன்கூட்டியே வாங்கி விட்டதால் நேற்று ஆட்டுச் சந்தையில் விறுவிறுப்பு இல்லை., என்றனர்.