/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காலி மனை இடத்திற்கு அரசின் வழிகாட்டி மதிப்பு பன்மடங்கு உயர்வு! நடுத்தர மக்கள் வீட்டுமனை வாங்குவதில் சிக்கல்

ADDED : மார் 09, 2024 09:05 AM
தமிழ்நாடு முழுவதும் கடந்த நிதியாண்டின் துவக்கத்தில் இட விற்பனையில் ஒரு சதுர அடி அரசின் வழிகாட்டி மதிப்பு மறு சீரமைக்கப்பட்டது. இதில் தேனி அல்லிநகரம் கிராமத்தில் நேருசிலை முதல் பெரியகுளம் ரோடு சாலைபிள்ளையார் கோயில் வரை ஒரு சதுர அடிக்கு ரூ.4000 என, கடந்த ஆட்சியில் இருந்தது. இதில் 33 சதவீதம் குறைத்து, தி.மு.க., அரசு வழிகாட்டி மதிப்பை குறைத்தது.
அதன் பின் மீண்டும் பதிவுத்துறை திடீரென ஒரு சதுரடிக்கு ரூ.4 ஆயிரம் என அதிகரித்து உத்தரவிட்டது. இதே வழிகாட்டி மதிப்பு மாவட்டத்தின் பல கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் உயர்ந்துள்ளது. இதனால் இடம் வாங்கி வீடு கட்ட நினைத்தவர்கள், நீண்டகாலமாக சேமித்து வைத்து பணத்தில் வீடு கட்ட நினைத்த சாதாரண மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல்வாரத்தில் அமலான வழிகாட்டி மதிப்பின் விலையை விட தற்போது பன்மடங்கு உயர்ந்ததுள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமே மனையிடங்களை வாங்கியும், விற்பனை செய்து வருகின்றனர். அரசின் வழிகாட்டி மதிப்பு உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க கோரிக்கை வலுத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், அரசு வழிகாட்டி மதிப்பை எந்தவித முன் அறிவிப்பு இன்றி பல மடங்கு உயர்த்தி உள்ளது சாதாரண மக்களின் வீட்டு மனை வாங்கும் கனவை சிதைத்துள்ளது. இதனால் கடந்த 10 மாதங்களாக பெரிய வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே வீட்டு மனைகள் பதிவு செய்கின்றனர். அரசு வழிகாட்டி மதிப்பின் விலையை குறைத்தால் எங்களை போன்ற ஏழை எளிய மக்களும் இடம் வாங்கி வீடு கட்ட முடியும். குறைக்காவிட்டால் வீடு கட்டும் எண்ணத்தை கானல் நீராக்கி விட வேண்டும்.', என்றனர்.