/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுமை பள்ளிகள் திட்டம் மூன்று பள்ளிகள் தேர்வு ரூ.60 லட்சத்தில் மேம்படுத்த திட்டம்

ADDED : அக் 29, 2024 05:45 AM
தேனி: மாவட்டத்தில் பசுமை பள்ளிகள் திட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ரூ.60 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளை பசுமை வளாகமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்காக பசுமை பள்ளிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாநிலத்தில் 46 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்த பள்ளிகளில் தலா ரூ.20 லட்சத்தில் சோலார் மேற்கூரை அமைத்தல், மழைநீர் சேகரிப்பு திடல், காய்கறித்தோட்டம், மூலிகைத்தோட்டம், மக்கும் குப்பையை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தவிர இப்பணிகள் பற்றி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் இத்திட்டத்தில் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு, வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.