/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்விளையாட்டு அரங்க பணிகள் ஜூலையில் நிறைவு
/
உள்விளையாட்டு அரங்க பணிகள் ஜூலையில் நிறைவு
ADDED : மார் 17, 2024 06:43 AM

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், ஸ்கேட்டிங் மைதானம் ஜூலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், ரூ.30 லட்சம் செலவில் ஸ்கேட்டிங் மைதானம், ரூ. 31.30 லட்சம் செலவில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் ஸ்கேடிங் மைதான பணிநிறைவு பெற்றது. உள்நோக்கு விளையாட்டு அரங்கில் மேற்கூரை பணிகள் நடந்து வருகிறது. இம்மூன்று மைதானங்களையும் ஜூலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் கூறுகையில், உள்விளையாட்டு அரங்கில் 4 பேட்மிட்டன் மைதானம், கூடைப்பந்து, வாலிபால், ஜிம்னாஸ்டிக், கபடி, செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்கான வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்கலாம். என்றனர்.

