/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மலையடிவாரங்களில் சிறிய நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்தல்; சிறு குளங்கள் விளை நிலங்களாக மாறிய அவலம்
/
மலையடிவாரங்களில் சிறிய நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்தல்; சிறு குளங்கள் விளை நிலங்களாக மாறிய அவலம்
மலையடிவாரங்களில் சிறிய நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்தல்; சிறு குளங்கள் விளை நிலங்களாக மாறிய அவலம்
மலையடிவாரங்களில் சிறிய நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்த வலியுறுத்தல்; சிறு குளங்கள் விளை நிலங்களாக மாறிய அவலம்
ADDED : ஜூலை 12, 2025 03:57 AM
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் ரோட்டிற்கு மேற்கு பக்கம் மலையடிவாரங்களில் சிறிய நீர்த் தேக்கங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் ஆதாராமாகவும் முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. தேனி மாவட்டத்தின் தண்ணீர் தேவையை போக்குகிறது. லோயர்கேம்பில் துவங்கி தேனி வரை ரோட்டிற்கு மேற்கு பகுதி மானாவாரி நிலங்களாக உள்ளது. சோளம், கம்பு, மக்காச் சோளம், நிலக்கடலை, துவரை, கொட்டை முத்திரி, உளுந்து, மொச்சை, தட்டை, எள்ளு, உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியாகிறது. இப் பகுதியினை கண்மாய் பாசனத்திற்கு மாற்ற 18 ம் கால்வாய் அமைக்கப்பட்டது. இக் கால்வாயில் ஆண்டிற்கு குறிப்பிட்ட நாட்களே தண்ணீர் வழங்கப்படும். முல்லைப் பெரியாறு அணை மூலம் வழக்கமான பாசன வசதி இல்லை என்பதால் மானாவாரி நிலங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. வானம் பார்த்த பூமியாகவே இன்றும் உள்ளது. தோட்ட கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் பராமரிக்க இந்த கால்வாய் உதவுகிறது.
லோயர்கேம்பில் ஆரம்பித்து தேவாரம் வரையிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில், மழை கிடைத்தால் தான் விவசாயம் செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை நீரை தேக்குவதற்கு வசதியின்றி வீணாகிறது. மானாவாரி நிலங்களுக்கு அருகில் இருந்த பல சிறிய கண்மாய்கள் ஆக்கிரமித்து காடுகளாக மாற்றப்பட்டு விட்டது. கம்பத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்கள் ஆக்கிரமிப்பால் காணாமல் போனது. இதனால் மழை காலங்களில் மலைக்குன்றுகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஒடி ஆற்றில் கலக்கிறது.
எனவே கம்பம் பள்ளத்தாக்கில் ரோட்டிற்கு மேற்கு பக்கம், மலையடிவாரங்களில் சிறிய நீர்த் தேக்கங்களை ஏற்படுத்த வேண்டும். இதனால் மானாவாரி நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கால்நடைகள், வனஉயிரினங்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். முன்னதாக மலையடிவாரங்களில் இருந்த குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் மாற்றப்பட்டுள்ளது. அவற்றை சர்வே செய்து மீட்க வேண்டும். நீர்வழித்தடங்கள், விளை நிலங்களாக மாற்றப்பட்டதை கையகப்படுத்தி மீண்டும் நீர் வழித் தடமாக மாற்ற வேண்டும். வேளாண் பொறியியல் துறை தேவையான இடங்களில் சிறிய நீர்த் தேக்கங்கள், தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.