/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டு ரோடு குண்டும் குழியுமாக மாறும் அவலம்
/
கம்பமெட்டு ரோடு குண்டும் குழியுமாக மாறும் அவலம்
ADDED : மே 28, 2025 07:04 AM

கம்பம் : இருமாநில இணைப்பு ரோடாக உள்ள கம்பமெட்டு ரோடு குண்டும் குழியுமாக மாறி வருகிறது. தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஏல விவசாயிகள் புலம்புகின்றனர்.
கேரளாவை தமிழகத்துடன் இணைக்கும் ரோடுகளில் கம்பமெட்டு ரோடு முக்கியமானதாகும். தினமும் நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் தோட்ட தொழிலாளர்கள் ஏலத்தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.
சபரிமலை சீசனில் இந்த ரோடு ஒரு வழிப்பாறையாக பயன்படுகிறது.
இடுக்கி மாவட்ட மக்கள் தினமும் காய்கறி, பலசரக்கு, ஜவுளி, கால்நடை தீவனங்கள் வாங்க கம்பம் வந்து செல்கின்றனர்.
கம்பத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் கம்பமெட்டு உள்ளது. இதில் 7 கி.மீ. மலைப்பாதையாகும். 20 க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட செங்குத்தான ரோடாகும்.
கடந்த சில மாதங்களாக ரோடு குண்டும் குழியுமாக மாறி வருகிறது. குறிப்பாக கம்ப மெட்டிலிருந்து இறங்கும் போது முதல் மூன்று வளைவுகளில் ரோடு அடிக்கடி சேதமடைகிறது. நீருற்று மலையிலிருந்து ரோட்டிற்கு வருவதால் ரோடு சேதமடைகிறது.
தற்போது குண்டும் குழியுமாக மாறி வருகிறது. தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று ஏல விவசாயிகள் புலம்புகின்றனர்.
இப்போதே பராமரிப்பு பணிகளை செய்தால், மழைக்கால பாதிப்புக்களில் இருந்து தப்பிக்கலாம் என்று கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன் தெரிவித்தார்.