/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
ADDED : அக் 16, 2024 04:15 AM

--பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய கண்ணனை வடகரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி 49. தச்சு பணியாளர். பெரியகுளம் எ.புதுப்பட்டி செல்லும் ரோட்டில் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். பெரியகுளம் காந்திநகரை சேர்ந்த கண்ணன் 36, டூவீலரில் வந்து அழகர்சாமியிடம் கத்தியை காட்டி சட்டைப்பையில் இருக்கும் பணத்தை கொடு என மிரட்டியுள்ளார். அழகர்சாமி சத்தம் போட்டுள்ளார்.
அங்கிருந்து சென்ற கண்ணனை, வடகரை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் கைது செய்தார். கண்ணன் மீது தேவதானப்பட்டி, வடகரை, தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் 14 வழக்குகள் உள்ளது.