/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்கள் வீட்டு வேலை செய்தாலே போதும் என்ற மனநிலை மாற வேண்டும் தினமும் 45 நிமிட நடைபயிற்சி அவசியம்

ADDED : நவ 14, 2024 07:03 AM
பெண்கள் தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பை தவிர்க்க முடியும் என்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் எம்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:
உலக அளவில் சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா மாறி உள்ளது. இந்தியாவில் சர்க்கரை நோயால் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபகால ஆய்வுப்படி 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் 31.31 கோடி பெண்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு குறுகிய காலத்தில் இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மாதவிடாய் (Manopaus) நின்ற பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், வயதாகுதல் போன்ற காரணங்களால் இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் வர வழி ஏற்படுகிறது. குடும்பச் சுமை காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு அதீத உடல் பருமன், எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இவர்கள்தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். PCOD (சினைப்பை நீர்க்கட்டி) உள்ள பெண்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வர வாய்ப்புகள் உள்ளன.
உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி, முறையான மருத்துவ சிகிச்சை மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதால் சர்க்கரை நோயால் வரும் கடுமையான பாதிப்புகளான கண் பார்வை இழப்பு, சிறுநீரக பாதிப்பு, இருதய பிரச்சினை போன்ற பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.
வீட்டில் வேலை செய்தாலே போதும் என்ற மனநிலையை மாற்றி தினமும் 45 நிமிடம் நடை பயிற்சியை பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் சர்க்கரை நோய் பாதிப்பை தவிர்க்க முடியும் என்றார்.