/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
20 நிமிடத்தில் முடிந்த போடி நகராட்சி கூட்டம்
/
20 நிமிடத்தில் முடிந்த போடி நகராட்சி கூட்டம்
ADDED : பிப் 01, 2024 04:29 AM
போடி : இரண்டு மாதங்கள் கழித்து நேற்று நடந்த போடி நகராட்சி கூட்டம் துவங்கிய 20 நிமிடத்தில் முடிந்தது.
போடி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. கமிஷனர் ராஜலட்சுமி, பொறியாளர் குணசேகர், மேலாளர் முனிராஜ் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
மணிகண்டன், (பா.ஜ.,): டெண்டர் விடப்பட்ட ரோடு, போர்வெல், சாக்கடை சிறுபாலம் பணிகள் துவங்கி பல மாதங்கள் ஆகியும் நிறைவு பெறாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பொறியாளர் : விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனலட்சுமி, (தி.மு.க.,) : நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் எத்தனை உள்ளது. ஏலம் விடப்பட்டது எத்தனை, ஏலம் விடாமல் உள்ள கடைகள் எத்தனை.
உதவி வருவாய் அலுவலர் : நகராட்சிக்கு சொந்தமாக 158 கடைகள் உள்ளன. புதிதாக கட்டப்பட்ட சில கடைகள் ஏலம் விடப்பட்டும் எடுக்க முன்வராததால் சில கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.
தனலட்சுமி : நகராட்சி அனுமதி இன்றி கடைகள் செயல்படுகிறது.
உதவி வருவாய் அலுவலர் : விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி 33 வார்டுகளில் பழுதடைந்த சிறு பாலங்களை அகற்றி விட்டு புதிய சிறு பாலங்கள் அமைத்திட நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது உட்பட 65 தீர்மானங்கள் 20 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டன.
33 வார்டுகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகள் இருந்தும் கூட்டத்திற்கு வந்த 2 கவுன்சிலர்கள் தவிர மற்ற யாரும் பொதுமக்கள் பிரச்னைகளை பேசவில்லை. மாலை 4 : 20 மணிக்கு துவங்கிய கவுன்சில் கூட்டம்
4 : 40 மணிக்கு ( 20 நிமிடத்தில்) முடிந்தது.