/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் முடிவை கணிக்க முடியாமல் கட்சியினர் திணறல்; வாக்காளர்கள் அனைத்து கட்சி பிரசாரத்தில் பங்கேற்பு
/
தேர்தல் முடிவை கணிக்க முடியாமல் கட்சியினர் திணறல்; வாக்காளர்கள் அனைத்து கட்சி பிரசாரத்தில் பங்கேற்பு
தேர்தல் முடிவை கணிக்க முடியாமல் கட்சியினர் திணறல்; வாக்காளர்கள் அனைத்து கட்சி பிரசாரத்தில் பங்கேற்பு
தேர்தல் முடிவை கணிக்க முடியாமல் கட்சியினர் திணறல்; வாக்காளர்கள் அனைத்து கட்சி பிரசாரத்தில் பங்கேற்பு
ADDED : ஏப் 17, 2024 05:34 AM
கடந்த தேர்தல்களில் கட்சிகளின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சி அனுதாபிகள் போன்றவர்கள் மட்டுமே தேர்தல் பிரசாரம், ஓட்டு சேகரிப்பு களப்பணிகளில் ஈடுபடுவார்கள். ஒரு கட்சியில் பிடிப்பு கொண்ட தொண்டர்கள் பிற கட்சியினர் கூட்டம், பிரசாரம் என எது நடந்தாலும் ஒதுங்கி விடுவார்கள். சில கிராமங்களில் மாற்று கட்சியினர் கடைகளில் கூட பொருட்கள் வாங்காமல் புறக்கணித்து செல்வார்கள். அந்தளவிற்கு தாங்கள் சார்ந்துள்ள கட்சி மீது பிடிப்பும், விசுவாசம் இருந்தது. இதனால் தேர்தல் நாட்களில் அந்தந்த கட்சியினர் தேர்தல் பணி சுறுசுறுப்பு, பிரசார கூட்டங்களில் திரளும் கூட்டத்தை வைத்தே வேட்பாளரின் வெற்றி,தோல்வியை தேர்தலுக்கு முன்பே நிர்ணயித்து விடலாம்.
ஆனால் தற்போது நடைபெறும் லோக்சபா தேர்தலில் இந்த டிரெண்ட் முற்றிலும் மாறிவிட்டது. தேர்தல் பிரசாரத்திற்கு வந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வருகையில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரசார கூட்டங்களுக்கு பெண்கள் இவ்வளவு ஆர்வமாக வருகிறார்களா என விசாரித்தால் கூட்டத்திற்கு ஆட்களை திரட்ட கட்சியினர் 2 மணிநேரத்திற்கு தலா ரூ.200 முதல் ரூ.300 வரை கவனிப்பு செய்கின்றனர். எவ்வித சிரமம் இல்லாமல் பிரசாரத்தை வேடிக்கை பார்க்க பணம் தருவதால் 'கரும்பு திண்ண கூலியா' என்பது போல் எல்லா கட்சிகளுக்கும் பணத்திற்கான டோக்கன் பெற்று ஆண்களும், பெண்களும் திரள்கின்றனர். அ.தி.மு.க., பிரசாரத்தில் கூடிய அதே கூட்டம், தி.மு.க., பிரசாரத்திலும், அ.ம.மு.க., பிரசாரத்திலும் திரள்கின்றனர்.
தலைவர்கள் பிரசாரத்திற்கு தான் பணம் கொடுத்து ஆட்களை திரட்டுகிறார்கள் என்றால் தெருக்களில் வீடு, வீடாக ஓட்டு கேட்கவும் ஒரு மணிநேர ஓட்டு சேகரிக்க வருவோருக்கு தலா ரூ.100 வழங்குகின்றனர். இதற்கும் போட்டி போட்டி மக்கள் வருகின்றனர். தற்போது நிலவும் கவனிப்பு டிரெண்டால் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள், யார் பிரசாரத்திற்கு கூட்டம் கூடுகிறது, யாருக்கு ஆதரவு என்பதை கணிக்க முடியாமல் பார்வையாளர்கள் திணறுகின்றனர். இந்த தொகுதியில் யாருக்கு வெற்றி என விபரமான நபர்களிடம் கேட்டால் கூட ஒரே வரியில் 'பணம் கொடுத்தால் எல்லோருக்கும் கூட்டம் கூடுகிறது. இதனால் கணிக்க முடியவில்லை' என கூறி நழுவி விடுகின்றனர். பணத்திற்காக சேரும் கூட்டத்தால் அரசியல் கட்சியினர் முடிவை அறிய முடியாமல் திணறுகின்றனர்.

