/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிதி ஒதுக்கீடு செய்து 5 ஆண்டுகளாக ரோடு அமைக்காத அவலம் அடிப்படை வசதி இன்றி சூலப்புரம் மக்கள் சிரமம்
/
நிதி ஒதுக்கீடு செய்து 5 ஆண்டுகளாக ரோடு அமைக்காத அவலம் அடிப்படை வசதி இன்றி சூலப்புரம் மக்கள் சிரமம்
நிதி ஒதுக்கீடு செய்து 5 ஆண்டுகளாக ரோடு அமைக்காத அவலம் அடிப்படை வசதி இன்றி சூலப்புரம் மக்கள் சிரமம்
நிதி ஒதுக்கீடு செய்து 5 ஆண்டுகளாக ரோடு அமைக்காத அவலம் அடிப்படை வசதி இன்றி சூலப்புரம் மக்கள் சிரமம்
ADDED : ஜூலை 29, 2025 01:07 AM

போடி: போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட சூலப்புரத்தில் ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் 5 ஆண்டுகளா ரோடு அமைக்காததால் மக்கள் சிரமம் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சிலமலை ஊராட்சி, முதலாவது வார்டு சூலப்புரம் முத்தாலம்மன் கோயில் தெரு, மேற்கு, வடக்கு, நடுத்தெரு, குதுவல் தெரு உள்ளிட்ட பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்கு தெருக்கள் முறைப்படுத்தாததால் பாதை வசதி இருந்தும் இதுவரை ரோடு வசதி இல்லை. இதனால் பாதை நடந்து செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ளன.
மெயின் ரோட்டில் மின்கம்பங்கள் இருந்தும் விளக்கு இல்லை. தெருக்களில் குப்பை அகற்றாமல் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியில் நிலவும் மக்கள் பிரச்னை குறித்து கூறியதாவது:
ரேஷன்கடை அமைக்க வேண்டும் சின்ன ஜக்கையா, சூலப் புரம்: முதலாவது வார்டு முத்தாலம்மன் கோயில் தெருக்களில் சாக்கடை வசதி இன்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் குளம் போல தேங்கி உள்ளன.
இதில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லை அதிகம் உள்ளது.
மழைக் காலங்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சகதியால் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை.
சூலப்புரம் மெயின் ரோட்டில் இருந்து முத்தாலம்மன் கோயில் தெருவிற்கு செல்லும் பாதையில் ரோடு அமைக்க 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை.
இதனால் வாகனங்களில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இட வசதி இருந்தும் நிரந்தர ரேஷன் கடை இல்லை. சாக்கடை, ரோடு, ரேஷன்கடை வசதிகள் செய்து தர ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம் ஆனந்தராஜ், சூலப்புரம்: மெயின் ரோட்டில் அங்கன்வாடி மையம் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காமல் பயன்பாடு இன்றி உள்ளது.
தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் வடக்கு தெருவில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
விளையாட்டு மைதானம் அமைக்க இடவசதி இருந்தும் மைதான வசதி இல்லை.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உடற் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.
குதுவல் நிலத்தில் 42 வீடுகள் கட்டி பல ஆண்டுகள் வசிக்கின்றனர். பட்டா கேட்டு கிடைக்கவில்லை.
தெருவிளக்கு வசதி தேவை சிவப்பிரகாசம், சூலப் புரம்: சூலப்புரத்தில் தெருவிளக்குகள் எரியாததால் பெண்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். நூலக வசதி இன்றி மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். சாக்கடை தூர்வாரி பல மாதங்களான நிலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.
குப்பை அகற்றாமல் மொத்தமாக கொட்டி தீ வைத்து வருவதால் மக் களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது.
தெருக்களை முறைப்படுத்தவும், சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்கி தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.